"சேலம், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்" -சென்னை வானிலை மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் இருநாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் நான்கு நாட்களுக்கும் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மன்னார் வளைகுடா பகுதிக்கு 2 நாட்களுக்கும், அரபிக் கடல் பகுதிக்கு 4 நாட்களுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments